ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், ரகுல் ப்ரீதி சிங் மற்றும் பலர் நடிக்கும் 'துப்பறிவாளன்' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ளது. விஷால் தற்போது நடித்து வரும் 'கத்திச்சண்டை' படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. அதற்கடுத்து இடைவெளி இல்லாமல் மிஷ்கின் படத்தில் நடிக்க உள்ளார் விஷால். ரகுல் ப்ரீத் சிங் தற்போது ராம் சரணுடன் 'துருவா' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் விரைவில் முடிவடைய உள்ளது. 'துப்பறிவாளன்' படம் மூலம் தமிழில் ஒரு திருப்புமுனை கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் ரகுல்.
மிஷ்கின் கடைசியாக இயக்கிய 'பிசாசு' படம் வெளிவந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் தற்போது 'சவரக்கத்தி' படத்தில் நடித்து வருகிறார். மிஷ்கின் இயக்கிய 'சித்திரம் பேசுதடி, அஞ்சாதே' படங்களைத் தவிர மற்ற படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறவில்லை. 'பிசாசு' படம் கூட மிகச் சுமாராகத்தான் ஓடியது. ஒரு இயக்குனராக தன்னை மீண்டும் நிரூபிக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறார் மிஷ்கின்.
இப்படம் பற்றிய அறிவிப்பு வந்து நீண்ட நாட்களாகிவிட்டது. இப்போதுதான் படப்பிடிப்பு என்ற அடுத்த கட்டத்துக்குள் நுழைகிறார்கள்.