சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
மஜ்னு, நேனு லோகல் போன்ற படங்களில் பிசியாகியிருக்கும் நானி நடிப்பில் மஜ்னு திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மஜ்னு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று(ஆகஸ்ட் 26) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் இரண்டு நாட்கள் கழித்தே மஜ்னு பாடல்கள் வெளிவரும் என நானி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
நானி தனது டுவிட்டரில் மஜ்னு படத்தின் பாடல்கள் வெளியீடு இரண்டு நாட்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். விரைவில் அதிகாரப்பூர்வ பாடல்கள் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. உய்யாலா ஜம்பலா படத்தை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் விரின்சி வர்மா இயக்கும் மஜ்னு படத்தில் நானிக்கு ஜோடியாக மலையாள நடிகை அனு இமானுவேல் நடிக்கின்றார். ஆனந்தி ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது.