ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிவகார்த்திகேயன் தன்னுடைய நண்பர் பெயரில் தயாரித்து வரும் முதல் தயாரிப்பான 'ரெமோ' திரைப்படம் ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் முதல் வாரம் வெளியாகவிருக்கிறது. பாண்டிராஜின் உதவியாளரான பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ள இப்படத்தின் சிங்கிள் டிராக் ரசிகர்களிடத்தில் ஓரளவு வரவேற்பு பெற்றுள்ளது.
இந்நிலையில், 'ரெமோ' படத்தின் பாடல்களை அடுத்த மாதம் (செப்டம்பர்) 5ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இதனை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமே அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இதற்கிடையில் 'ரெமோ' படத்தின் ஃபர்ஸ்ட் காப்பியை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், சிவகார்த்திகேயன், அவரது நண்பர் ஆர்.டி.ராஜா ஆகியோர் அண்மையில் பார்த்துள்ளனர். அவர்களுக்கு ரெமோ படம் மிகவும் பிடித்துவிட்டதாம். எனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் மீண்டும் ஒரு படம் இயக்கும் வாய்ப்பை பாக்யராஜ் கண்ணனுக்கு வழங்கியுள்ளனர்.
அவர் இயக்கும் அடுத்த படத்தையும் சிவகார்த்திகேயனின் நிறுவனமே தயாரிக்க முடிவு செய்துள்ளது. அது மட்டுமல்ல, ரெமோ படத்தை இயக்க பாக்யராஜ் கண்ணனுக்கு சில லட்சங்கள் சம்பளம் கொடுத்த ஆர்.டி.ராஜா, இரண்டாவது படத்தை இயக்க 5 கோடி சம்பளம் தருவதாக வாக்களித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.