இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனாக்ஷி சின்ஹா. தற்போது இவர், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‛அகிரா' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற செப்., 2-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இதனால் அகிரா படத்தின் புரொமோஷனில் பம்பரமாய் சுழன்று கொண்டு இருக்கிறார் சோனாக்ஷி. இதனிடையே, சோனாக்ஷி சின்ஹா, தன் நண்பர் பன்டி சச்தேவ்வை காதலிப்பதாகவும், இருவருக்கும் நிச்சயம் கூட நடந்துவிட்டதாகவும் பாலிவுட்டில் ஒரு கிசுகிசு வெளியாகியிருக்கிறது. ஆனால் இதை முற்றிலுமாக மறுத்துள்ளார் சோனாக்ஷி.
இதுப்பற்றி சோனாக்ஷி கூறியிருப்பதாவது... ‛‛இந்த செய்தி முற்றிலும் தவறானது என்பதை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். என் குடும்பத்தையும், நண்பர்களையும் பாதிக்காத வகையிலான செய்திகளை நான் பெரிதாக எடுத்து கொள்வது கிடையாது. அதேசமயம் அவர்களை பாதிக்கும் விதத்தில் இருந்தால் நிச்சயம் நான் அதற்கு பதில் சொல்வேன் என்று கூறியிருக்கிறார்.