இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டின் ஆக்ஷ்ன் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் தன்னி தியோல். பல நடிகர்களின் வரவுக்கு பின்னர் சன்னி தியோலுக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்தன. இருப்பினும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சன்னி தியோல், தனது மகன் கரண் தியோலை சினிமாவில் களமிறக்கிவிட முடிவு செய்துள்ளார்.
1983-ம் ஆண்டு சன்னி தியோல் நடிப்பில் வெளிவந்த ‛பேட்டா' படத்தையே இந்தக்காலத்திற்கு ஏற்றபடி ரீ-மேக் செய்ய இருக்கிறார். சன்னி தியோலே இப்படத்தை இயக்கி, தயாரிக்க உள்ளார். படத்தில் கரண் தியோல் ஜோடியாக சைப் அலிகான் மகள் சாரா அலிகானை நடிக்க வைக்க எண்ணினார் சன்னி தியோல், ஆனால் சாரா, கரண் ஜோகரின் ‛ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2' படத்தில் கமிட்டாகிவிட்டதால் சன்னி தியோல் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து வேறு ஒரு நடிகையை தேடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் சன்னி தியோல். ஹீரோயின் முடிவானதும் படப்பிடிப்பை துவக்க உள்ளார் சன்னி.