ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் விஜய்-சங்கீதா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அவர்களது திருமணம் 1999ம் ஆண்டு நடைபெற்றது. அவர்களுக்கு சஞ்சய், திவ்யா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் சஞ்சய் விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் நான் அடிச்சா தாங்க மாட்டேன் நாலு மாசம் தூங்க மாட்டே -என்ற பாடலில் நடனமாடினார். அதேபோல், விஜய்யின் மகள் திவ்யா, தெறி படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்நிலையில், தனது பிறந்த நாட்களை ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடி வரும் விஜய், தனது திருமண நாளை குடும்பத்தாருடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்து வருகிறார். அந்த வகையில், நேற்று விஜய்-சங்கீதா தம்பதியினருக்கு 17வது ஆண்டு திருமண நாள் ஆகும். அதனால் அவர்களுக்கு சினிமாத்துறையினர், ரசிகர்கள் என ஏராளமானோர் இணையதளம் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.