‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஒரு நேரத்தில் அம்மா வேடங்களில் நடிக்க பல மாஜி ஹீரோயினிகள் மறுத்து வந்தனர். ஆனால் இப்போது அந்த நிலை மாறி விட்டது. ராதிகா, நதியா, ஊர்வசி, மீனா, சரண்யா உள்ளிட்ட பல ஹீரோயினிகள் அம்மா வேடங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களில் ராதிகா சின்னத்திரையில் நடித்துக்கொண்டே சினிமாவில் கூடுதல் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார். அந்த வகையில், நானும் ரவுடிதான், தங்கமகன், தெறி, தர்மதுரை படங்களுக் குப்பிறகு முன்னணி அம்மா நடிகையாகி விட்டார். தற்போது எஸ்-3, சங்கிலி புங்கிலி கதவ தொற உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.
மேலும், எந்த மாதிரி காட்சிகளாக இருந்தாலும் அதுவாகவே மாறி விடும் திற மையான நடிகை என்பதால், ராதிகாவை அம்மா வேடங்களில் நடிக்க வைப்பதில் இளவட்ட டைரக்டர்களும் விரும்புகின்றனர். அதனால் அம்மா வேடம் என்றாலே ராதிகாவைத்தான் தொடர்பு கொள்கிறார்கள். ஆனால் அவரோ, தேடி வரும் எல்லா படங்களையுமே ஓகே சொல்வதில்லையாம். கதைகளுக்கு அதிக சம்பந்தமுள்ள அம்மா வேடங்களுக்குத்தான் முதலிடம் கொடுக்கிறாராம்.
அந்த வகையில், தற்போது சூர்யா நடித்து வரும் எஸ்-3 படத்தில் ஸ்ருதிஹாசனின் அம்மாவாக நடிக்கிறார் ராதிகா. இதே படத்தில் சூர்யாவின் அம்மா, அனுஷ்காவின் அம்மா என பல அம்மா நடிகைகள் இந்த படத்தில் இருந்தபோதும், ராதிகாவின் அம்மா கேரக்டருக்கு கதையில் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாராம் டைரக்டர் ஹரி.