‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாபிசிம்ஹா- கீர்த்தி சுரேஷ், தாமிரபரணி பானு முக்கிய வேடங்களில் நடித் துள்ள படம் பாம்பு சட்டை. ஆதம்தாசன் இயக்கியுள்ள இந்த படத்தை சரத்குமார், ஸ்டீபன் ஆகியோர் தயாரிக்க, நடிகர் மனோபாலா பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்து வந்தார். ஆனால், வேகமாக வளர்ந்த வந்த அப்படம், நடிகர் சங்க தேர்தலில் சரத்குமாருக்கு எதிரணியில் மனோபாலா செயல்பட்டதால் படத்திற்கான பைனான்ஸ் கொடுப்பதை அவர் நிறுத்தி விட்டார். இதனால் இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருந்த நிலையில், பாம்புசட்டை பட வேலைகள் நிறுத்தப்பட்டன.
ஆனால் பல மாத இடைவெளிக்குப்பிறகு தற்போது அவர்களுக்கிடையிலான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகிற தீபாவளிக்கு பாம்புசட்டை படத்தை திரைக்கு கொண்டு வரும் வேலைகள் நடக்கிறது. முக்கியமாக, பாபிசிம்ஹாவின் மார்க்கெட்டை விட, அப்பட நாயகி கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால், படத்தை வெளியிட இது சரியான நேரம் என்று அவரது பெயரை முன்வைத்து வியாபாரம் உள்ளிட்ட அடுத்தக்கட்ட வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருப்பதாக அப்படக்குழுவினர் சொல்கிறார்கள்