ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 61வது பிறந்த நாள் விழா கடந்த ஆகஸ்ட் 22ல் வெகு விமர்சையாக நடந்தது. டோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது அறிந்ததே. டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மனைவியும் முன்னாள் நடிகையுமான நம்ரதா விழாவில் கலந்து கொண்டார். நம்ரதா, அல்லு அர்ஜூனின் மனைவி சினேகா ரெட்டி மற்றும் ராம் சரணின் மனைவி உபசனாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளிவந்து சமூக வலைதளங்களில் பரவிவருகின்றது. மூவரும் கைபிடித்தபடி அமர்ந்திருக்கும் அப்புகைப்படத்தை ராம் சரணின் மனைவி உபசனா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். டோலிவுட்டின் மூன்று முன்னணி நடிகர்களின் மனைவிமார்கள் சேர்ந்திருக்கும் அப்புகைப்படத்தை ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.