புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நட்ராஜ் நடிக்கும் படம் போங்கு. ருஹி சிங் ஹீரோயின். முண்டாசுப்பட்டி ராம்தாஸ், அர்ஜுன், அதுல் குல்கர்னி, ஷரத் லோகித்தாஸ் நடிக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். தாஜ் இயக்குகிறார் ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடந்தது. இதில் கலந்து கொண்டு இயக்குனர் லிங்குசாமி பேசியதாவது:
ஒளிப்பதிவாளர் நட்டி எனது பல ஆண்டுகால நண்பர். அவரது படமான சதுரங்க வேட்டையை நான்தான் எல்லா இடங்களுக்கும் எடுத்துச் சென்றேன். அவர் ஒளிப்பதிவாளரக இருந்து நடிகராகியிருக்கிறார். நான் இயக்குனராக இருந்து தயாரிப்பாளராகியிருக்கிறேன். பல இசை அமைப்பாளர்கள் நடிகர்களாக மாறியிருக்கிறார். பாடகர்கள் நடிகராகியிருக்கிறார்கள். இப்படி ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்கு போங்கு ஆட்டம் நடக்கிறது. இது ஒரு நல்ல போக்குதான். நம்மிடம் இருக்கிற திறமைகள் அனைத்தையும் காட்டுவதற்கு சினிமா பிளாட்பார்ம் அமைத்து தருகிறது என்றார்.
பார்த்திபன் பேசும்போது: சுத்தமான தங்கத்தில் நகை செய்ய முடியாது. அதனுடன் கொஞ்சம் செம்பு கலக்க வேண்டும். அதுதான் போங்கு. நல்ல தண்ணீரில் மீன் வளராது அதற்கு கொஞ்சம் அழுக்கு வேண்டும் அதுதான் போங்கு. வாழ்க்கையின் எல்லா விஷயத்திலும் போங்கு இருக்கிறது. அதனால் தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கிறது என்றார்.
விழாவில் தயாரிப்பளார் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் சிபிராஜ், நடிகைகள் சிருஷ்டி டாங்கே, பூஜாகுமார், மனீஷாஸ்ரீ, உள்பட பலர் கலந்து கொண்டனர்.