பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக மாறியிருக்கும் சுனில் தற்போது, ஈடு கோல்ட் எஹீ படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் வீரு பொட்லா இயக்கும் இப்படத்தை செப்டம்பர் 9ல் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்துடன் இயக்குனர் கரந்தி மாதவ் இயக்கத்தில் சுனில் நாயகனாக நடிக்கும் மற்றொரு திரைப்படம் ஆகஸ்ட் 29ல் துவங்கவுள்ளது. மேலும் டூ கன்ட்ரீஸ் எனும் மலையாள படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சுனில் நடிக்கவுள்ளார். டூ கன்ட்ரீஸ் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கிய பண்டல கணேஷிடமிருந்து இயக்குனர் சங்கர் வாங்கியுள்ளார். அப்படத்தை தெலுங்கில் தயாரித்து இயக்க திட்டமிட்டிருக்கும் சங்கர், நாயகனாக நடிக்க சுனிலை அணுகியுள்ளார். சுனிலும் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேடலில் ஈடுபட்டுள்ள சங்கர் விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என தெரிகிறது.