இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஜூனியர் என்.டி.ஆர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இணைந்து நடிக்கும் ஜனதா கேரேஜ் திரைப்படம் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் செப்டம்பர் 1ல் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் விக்ரம், நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்துள்ள இருமுகன் திரைப்படத்தை தெலுங்கிலும் செப்டம்பர் முதல் வாரத்தில் திரைக்கு கொண்டுவர படக்குழு தீர்மாணித்தது. விக்ரம் படத்திற்கும் தெலுங்கில் நல்ல மார்கெட் இருப்பதால் லாபத்தை இழக்க விரும்பாத விநியோகஸ்தர்கள், படங்களின் ரிலீஸ் தேதியை மாற்ற முயற்சித்தனர். இரு படக்குழுவினரும் சந்தித்து பேசியதன் விளைவால் இருமுகன் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். மேலும் விக்ரம் ஜூனியர் என்.டி.ஆரை போனில் தொடர்பு கொண்டு ஜனதா கேரேஜ் வெற்றி அடைய வாழ்த்து தெரிவித்து, இன்ப அதிர்ச்சி அடைய செய்துள்ளார். இருமுகன் திரைப்படம் தெலுங்கில் இன்கோகடு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளிவரவுள்ளது.