தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கரீனா கபூர், தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனால் இவர் இனி படங்களில் நடிக்க மாட்டார் என்று செய்தி பரவியது. ஆனால் இது எல்லாவற்றுக்கும் நேற்று முற்றுப்புள்ளி வைத்தார் கரீனா. கர்ப்பமாக இருந்தால் என்ன நடிக்க கூடாதா என்பது போன்று கேள்வி எழுப்பினார். இந்நிலையில் அவர் ‛வீரே தி வெட்டிங்' படத்தில் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் இதை கரீனா மறுத்துள்ளார். கண்டிப்பாக இந்தப்படத்தில் தான் நடிக்கப்போவதாக கரீனா கூறியுள்ளார்.
இதுப்பற்றி கரீனா கபூர் மேலும் கூறியிருப்பதாவது... ‛‛அக்டோபர் மாதம் முதல் ஷூட்டிங்கில் பங்கேற்கிறேன். தொடர்ந்து இரண்டொரு நாளில் நடித்துவிட்டு அதன்பின்னர் என்னுடைய பிரசவத்திற்கு பிறகு நடிக்க உள்ளேன். ‛வீரே தி வெட்டிங்' படத்தில் நிச்சயம் நான் நடிப்பேன், அதில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது இதற்கான பணிகள் நடந்து வருகிறது'' என்று கூறியுள்ளார்.
இதேப்போன்று ‛வீரே தி வெட்டிங்' படத்தின் தயாரிப்பாளரான ரேகா கபூர் கூறுகையில், ‛‛கரீனா, நடிக்க மாட்டார் என்ற செய்தி முற்றிலும் பொய்யானது. நிச்சயம் அவர் நடிப்பார், அக்டோபர் மாதமும், அடுத்தாண்டு தொடக்கத்திலும் ‛வீரே தி வெட்டிங்' படப்பிடிப்பில் கரீனா பங்கேற்கிறார்'' என்று கூறியுள்ளார்.