600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
சசிகுமார் நடித்த வெற்றிவேல் படத்தில் தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகை நிகிலா விமல். அதையடுத்து மீண்டும் சசிகுமாரின் கிடாரி படத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார் நிகிலா. வெற்றிவேல் படத்தில் அமைதியான பெண்ணாக நடித்த நிகிலாவுக்கு இந்த படத்தில் துடுக்குத்தனமான வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். முக்கியமாக சசிகுமாரை காதலிக்கும் நிகிலா, அவரிடம் உதட்டு முத்தம் கேட்டு துரத்தும் சில்மிஷ காட்சிகளும் படத்தில் உள்ளது.
இந்த காட்சிகளில் நடிப்பது பற்றி இயக்குனர் பிரசாந்த் முருகேசன் அவரிடம் விளக்கியபோது, சிறிதும் தாமதிக்காமல் இப்படி நடித்தால் போதுமா, இல்லை இப்படி நடிக்க வேண்டுமா? என்று உடனடியாக தனது பாணியில் இரண்டுவிதமாக நடித்துக்காட்டினாராம் நிகிலா. அந்த இரண்டுமே சூப்பராக இருந்ததால், அந்த காட்சியை நிகிலாவின் விருப்பம் போலவே நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டாராம் டைரக்டர். அதனால், அதிக டேக் எடுத்துக்கொள்ளாமல் ஓரிரு டேக்குகளிலேயே சசிகுமாரிடம் லிப் லாக் கேட்டு துரத்தும் அந்த காட்சிகளில் நடித்து கைதட்டு வாங்கினாராம் நிகிலா.