ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஷால் நடித்துள்ள கத்திச்சண்டை படத்தில் மீண்டும் காமெடியனாக நடித்துள்ள வடிவேலு, அந்த படத்தை அடுத்து இப்போது லாரன்சை நாயகனாக வைத்து பி.வாசு இயக்கி வரும் சிவலிங்கா படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்பு தனது படங்களில் பெரிய அளவில் காமெடி பண்ணாத லாரன்ஸ் இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து அதிக காமெடி காட்சிகளில் நடித்து வருகிறார். ஏற்கனவே 10 நாட்களுக்கு மேலாக பெங்களூரில் முகாமிட்டு நடித்து வரும் வடிவேலு, இன்னும் ஒரு வார காலம் அங்கு முகாமிடுகிறாராம்.
மேலும், கத்திச்சண்டை படத்தில் முன்பு தன்னுடன் காமெடி காட்சிகளில் நடித்த நடிகர் நடிகைகளில் தாடி பாலாஜி, குண்டு ஆர்த்தியை மட்டுமே இணைத் துக்கொண்ட வடிவேலு, இந்த சிவலிங்கா படத்தில் மேலும் சில காமெடியன் களை தன்னுடன் இணைத்து மெகா காமெடி கூட்டணி அமைத்துள்ளாராம். சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படும் இந்த சிவலிங்கா படத்தில் கிட்டத்தட்ட சந்திரமுகி படம் போன்று வயிறு குலுங்க சிரிக்க வைக் கும் காமெடி காட்சிகளில் நடித்து வரும் வடிவேலு, இந்த படத்தை முடித்ததும் சிம்புதேவன் இயக்கும் இம்சை அரசன்-2வில் நடிக்கிறாராம்.