தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் சகாப்தம் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த படம் சரியாக போகவில்லை. அதனால் அடுத்த வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. தற்போது தந்தையுடன் இணைந்து தமிழன் என்று சொல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சண்முக பாண்டியன் பிரபல தெலுங்கு இயக்குனர் எஸ்.கே.பஷீத்தின் படத்தில் நடிக்கிறார். பஷீத் இதுவரை 9 படங்கள் இயக்கி, தயாரித்துள்ளார். அல்லரே அல்லேரி, சத்யமே ஜெயதேவ், ராம்தேவ், முக்கிய படங்கள். 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் போட்டு தள்ளு என்ற படத்தையும் இயக்கினார். சில படங்களில் நடித்தும் உள்ளார். தற்போது அவர் சண்முக பாண்டியனை இயக்க இருக்கிறார். எஸ்.கே.பி. பிலிம்ஸ் சார்பில் அவரே தயாரிக்கவும் செய்கிறார். நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.