தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கயல் சந்திரன், சாட்னா டைட்டஸ் நடிக்கும் படம் திட்டம் போட்டு திருடுற கூட்டம். ஜோ மார்ட்டின் ஒளிப்பதிவு செய்கிறார், அஷ்வத் இசை அமைக்கிறார். புதுமுகம் சுதர் இயக்குகிறார்.
படத்தின் தலைப்பு படி திட்டம் போட்டு திருடுற கூட்டத்தை பற்றிய கதை. கதைப்படி அந்தக்கூட்டம் சென்னை மியூசியத்தில் ஒரு பழங்கால ஓவியம், மற்றும் அபூர்வ சிலை ஒன்றை திருடுகிறார்கள். இந்த மியூசியத்திற்குள் அவர்கள் திருடும் காட்சி 15 நிமிடங்கள் இடம்பெறுகிறது. சென்னை மியூசியத்தின் உட்புறத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி இல்லை என்பதால் கலை இயக்குனர் ரெமியன் சென்னை மியூசியத்தின் வடிவமைப்பைக் கொண்டு தனியாக ஒரு மியூசியத்தை அமைத்துள்ளார். நுங்கம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மியூசியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்கள், சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு படப்பிடிப்பு நடத்தப் பட்டு வருகிறது. படப்பிடிப்பிற்கு பிறகு சில நாட்கள் அதனை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடவும் முடிவு செய்திருக்கிறார்கள்.