ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
மலையாளத்தில் மம்முட்டி, சினேகா இணைந்து நடிக்கும் 'தி கிரேட் பாதர்' என்கிற படத்தை பிருத்விராஜ் தயாரிக்கிறார் என சில தினங்களுக்கு முன் சொல்லியிருந்தோம். தனது ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் மூலம் மம்முட்டியை வைத்து அவர் தயாரிக்கும் இரண்டாவது படம் இது.. இந்த ஆகஸ்ட் சினிமாஸில் உள்ள நான்கு பங்குதாரர்களில் நடிகர் ஆர்யாவும் ஒருவர். அதனால்தான் தாங்கள் தயாரித்த 'உறுமி' மற்றும் 'டபுள் பேரல்' ஆகிய படங்களில் நடித்து தனது மலையாளப்படங்களில் நடிக்கும் தனது தாகத்தை தீர்த்துக்கொண்டார் ஆர்யா.
ஆனால் மலையாள சினிமாவில் இன்னும் அழுத்தமாக தடம் பதிக்கவேண்டும் என்கிற எண்ணம் ஆர்யாவை விட்டு அகலவில்லை.. தற்போது மம்முட்டியின் புதிய படத்தில் சற்றே அதிக நேரம் வரும் கெஸ்ட் ரோல் ஒன்றில் பிருத்விராஜ் நடிப்பதாக இருந்தது.. ஆனால் ஆர்யாவோ, தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாகவும், மம்முட்டியுடன் நடிக்க விரும்பும் தனது ஆசையும் இதன்மூலம் நிறைவேறும் எனவும் பிருத்விராஜிடம் கோரிக்கை வைக்க, நண்பனுக்காக பிருத்விராஜும் அந்த கேரக்டரை விட்டுக்கொடுத்துவிட்டாராம்.