இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
டைகர் ஷெரப், ஸ்ரத்தா தாஸ் நடிப்பில் கபீர்கான் இயக்கத்தில் வெளியான படம் ‛பாகி'. ஆக்ஷ்ன் படமாக வெளிவந்த இப்படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இதன் தயாரிப்பாளர் சாஜித், பாகி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. முன்னதாக பாகி படத்தை கபீர்கான் இயக்கிய நிலையில், தற்போது பாகி-2 படத்தை கபீர்கானுக்கு பதிலாக நடன இயக்குநரும், இயக்குநருமான அகமதுகான் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுப்பற்றிய முறையான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.