மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் கமர்ஷியல் வெற்றியை அடுத்து எழில் இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத இப்படத்தின் பூஜை நேற்று உதயநிதியின் அலுவலகத்தில் எளிமையாக நடைபெற்றது. அந்தப் படத்தில் சம்மந்தப்பட்டவர்கள் தவிர வேறு யாரையும் பூஜைக்கு அழைக்கவில்லை.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. திட்டமிட்டது போலவே இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்காலிலும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் நடைபெற இருக்கிறது. முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக இருக்கும் இந்தப்படத்தை வருகின்ற கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர்.