ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பொய், ராமன் தேடிய சீதை ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்தவர் விமலா ராமன். அதன்பிறகு அவர் தமிழில் நடிக்கவில்லை. ஆனால் மலையாளம், கன்னடம் தெலுங்கு, இந்தி என்று பரவலாக நடித்து வருகிறார். அந்த வகையில், இப்போதுவரை அவர் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மற்ற மொழிகளில் பிசியாக நடித்து வருவதால் தமிழில் மீண்டும் நடிக்க அவர் பெரிதாக முயற்சி எதுவும் எடுக்கவில்லை.
ஆனால், தற்போது தமிழில் இருந்து விமலா ராமனைத்தேடி ஒரு ஆக்சன் படவாய்ப்பு சென்றிருக்கிறது. புதுமுக இயக்குனர் ஒருவர், அந்த கதையை திரிஷாவுக்காக ரெடி பண்ணியுள்ளார். அதை திரிஷாவிடம் சொன்னபோது, தற்போது மோகினி படத்தில் நடித்து வருவதை முன்வைத்து தனது சம்பளத்தை உயர்த்தி விட்டாராம். அதனால் பட்ஜெட் தாங்காது என்பதால் இப்போது திரிஷா நடிக்க வேண்டிய அந்த ஆக்சன் ஹீரோயினி வேடத்தில் விமலா ராமனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த படத்தில் நடிக்க விமலாராமன் ஓகே சொல்லிவிட்டால், மீண்டும் தமிழில் அவர் மறுபிரவேசம் செய்வார்.