Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கன்னடத்தில் பிசியாகும் அமலாபால்!

23 ஆக, 2016 - 08:32 IST
எழுத்தின் அளவு:
amala-paul-is-in-kannada-movie-with-sudeep

டைரக்டர் ஏ.எல்.விஜய்யுடனான கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றுள்ள அமலாபால், தொடர்ந்து சினிமாவில் நடிப்பதில் ஆர்வமாக உள்ளார். அதன்காரணமாக தனுசுடன் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்த அமலாபால், அவர் தயாரித்த அம்மா கணக்கு படத்திலும் நடித்தார். ஆனால் அப்போதெல்லாம் ஏ.எல்.விஜய்க்கும், அமலாபாலுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகிற விசயம் வெளியில் தெரியாமல் இருந்து வந்தது. ஆனால் விசயம் வெளியில் கசிந்த பிறகு, அமலாபாலுக்கு வாய்ப்பு கொடுப்பதில் தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டத் தொடங்கினர்.

அதன்காரணமாக, தனுசுடன் மீண்டும் நடிக்க கமிட்டாகியிருந்த வடசென்னை படத்தில் இருந்துகூட அமலாபால் நீக்கப்பட்டு விட்டதாக ஒரு செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி கோலிவுட்டில் தனக்கு யாரும் சான்ஸ்தர முன்வராததால், இங்கிருந்து இடம்பெயர்ந்து மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் அமலாபால். அந்த வகையில், கன்னடத்தில் சுதீப்புடன் ஹெப்புலி படத்தில் ஏற்கனவே நடித்து வரும் அவர், தற்போது தனுஷின் வேலையில்லா பட்டதாரி கன்னட ரீமேக்கிலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். கன்னட நடிகர் ரவிச்சந்திரனின் மகன் மனோரஞ்சனுக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கயிருப்பதாக அந்த படத்தை தயாரிக்கும் ராக்லைன் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in