மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? |
விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான வாகா படம் படு தோல்விப்பட பட்டியலில் சேர்ந்துவிட்டது. வாகா தோல்வியினால் கடும் அப்செட்டில் இருந்த விக்ரம் பிரபு தற்போது மெல்ல மீண்டு வருகிறார். இந்நிலையில் விக்ரம் பிரபு, ஷாம்லி நடிக்கும் 'வீரசிவாஜி' படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. படத்தின் இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அருள்நிதி நடித்த 'தகராறு' படத்தை இயக்கிய கணேஷ் விநாயக் இப்படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவிருக்கிறது. இதனை தொடர்ந்து 'வீரசிவாஜி' படத்தை அடுத்த மாதம் (செப்டம்பர்) 23-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். 'மெட்ராஸ் என்டர்பிரைசஸ்' நிறுவனம் சார்பில் நந்தகோபால் தயாரித்துள்ள இப்படத்தை 'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்' நிறுவனம் வெளியிடவிருக்கிறது.