தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
குக்கூ ராஜு முருகன் இயக்கத்தில் கடந்த 12-8-2016 அன்று வெளியான 'ஜோக்கர்' படத்திற்கு திரையுலக பிரபலங்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களின், சமூக ஆர்வலர்களின் பாராட்டுக்களும் குவிந்தவண்ணம் உள்ளன. ஜோக்கர் படத்தைப் பார்த்துவிட்டு 'இதில் யாரை பாராட்டுவது என்றே தெரியவில்லை.
இயக்குனர், நடிகர் இசை அமைப்பாளர்... கண்களில் கண்ணீர்! தயவு செய்து பாருங்கள்!'' என்று ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார் நடிகர் தனுஷ்! அவரை தொடர்ந்து '' applaud the team of #joker, brilliant film!'' என்று ட்விட்டரில் பாராட்டினார் ரஜினி. இவர்கள் தவிர, தொல் திருமாளவளவன், கீ.வீரமணி, நல்லகண்ணு, ஜி. ராமகிருஷ்ணன் ஆகிய அரசியல்கட்சித்தலைவர்களும் ஜோக்கர் படத்தைப் பாராட்டியுள்ளனர்.
ஜோக்கர் படம் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய லாபம் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. ஜோக்கர் படத்தின் பட்ஜெட்டே ரூ.1 கோடிக்குள் தான். ஆனால் ஜோக்கர் படம் இதுவரை இரண்டு கோடி வசூல் செய்திருக்கிறது. தமிழக வசூல் தவிர, சாட்டிலைட் ரைட்ஸ், பிற மொழி ரீமேக் ரைட்ஸ் என்ற வகையில் மேலும் ஒன்றரை கோடிகள் வரை லாப வரவுக்கு வாய்ப்புள்ளது. மொத்தத்தில் 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' போட்ட கணக்கு வொர்க்கவுட்டாகிவிட்டது.