டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
என் தந்தை மிகவும் வலிமையானவர் என்று நடிகை ஸ்ருதிஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசனின் வாரிசான நடிகை ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் பேசப்படும் நடிகையாக வலம் வருகிறார். தற்போது தமிழில் சூர்யாவின் எஸ்3 படத்திலும், தன் தந்தையுடன் சபாஷ் நாயுடு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தன் அப்பாவான கமல்ஹாசனுக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திரையுலகை சேர்ந்த பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் ஸ்ருதியும் தன் தந்தைக்கு நேரில் வாழ்த்து சொல்லியிருக்கிறார். அதோடு தன் டுவிட்டர் பக்கத்தில், ‛‛என் தந்தை மிகவும் வலிமையானவர், அவருடைய ஸ்டைலில் தடைகளை தகர்த்தெறிந்து எழுந்து, நடந்துள்ளார்'' என்று கூறியுள்ளார்.