ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே மற்றும் பலர் நடிக்க கடந்த வெள்ளியன்று வெளியான படம் 'தர்மதுரை'. விஜய் சேதுபதி நடிக்க சீனு ராமசாமி இயக்கிய 'இடம் பொருள் ஏவல்' படம் முடிவடைந்து இரண்டு வருடங்களாகியும் வெளிவராத சூழ்நிலையில், மீண்டும் தன்னுடைய குருநாதருக்கு ஒரு படத்தை நடித்துக் கொடுக்க வேண்டும் என விஜய்சேதுபதி நடிக்க முடிவெடுத்த படம் தான் 'தர்மதுரை'.
அது மட்டுமல்ல, தன்னுடைய படங்களுக்கு வினியோகஸ்தராக இருந்த ஸ்டுடியோ 9 சுரேஷ் தயாரிப்பில் 'வசந்தகுமாரன்' என்ற படத்தில் நடிக்க சம்மதித்தார் விஜய்சேதுபதி. ஆனால், சில நாட்களிலேயே சுரேஷுக்கும், விஜய் சேதுபதிக்கும் சண்டை ஏற்பட அந்தப் படம் கைவிடப்பட்டது. இருந்தாலும், பகையை மறந்து மீண்டும் சுரேஷ் தயாரிப்பிலேயே விஜய் சேதுபதி நடிக்க முடிவெடுத்த படம் தான் 'தர்மதுரை'.
இந்தப் படம் உருவாக முழுமுதற் காரணமாக இருந்தது விஜய் சேதுபதியின் நன்றியும், நல் எண்ணமும்தான். அதற்கேற்றபடி படமும் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வெளியான முதல் மூன்று நாட்களில் சுமார் 7 கோடி ரூபாய் வரை இந்தப் படம் வசூலித்திருக்கலாம் என கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. வார முதல் நாளான இன்று கூட பல தியேட்டர்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமான ரசிகர்கள் படம் பார்க்க வந்துள்ளார்கள். வியாபார ரீதியாக 'தர்மதுரை' படம் வெற்றிப் படம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.