ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டில் இருக்கும் பிரபல இயக்குர்களில் ரோஹித் ஷெட்டியும் ஒருவர். சில மாதங்களுக்கு முன் ரோஹித் ஷெட்டியும் , கரண் ஜோஹரும் 1989-ம் ஆண்டு, அனில் கபூர், ஜாக்கி ஷெரப் ஆகியோரது நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படமான ராம் லகானை ரீமேக் செய்ய போவதாக அறிவித்தனர். ராம் லகான் படத்தை இந்தக்காலத்திற்கு ஏற்றபடி ரீ-மேக் செய்ய இருக்கிறார் ரோகித் ஷெட்டி. ஆனால் இப்படம் நீண்ட நாட்களாகவே கிடப்பில் கிடக்கிறது.
இதைப்பற்றி ரோஹித் ஷெட்டி கூறியதாவது...." எனக்கும் இப்படத்தை இயக்க ஆசைதான். ஆனால் எல்லோரும் லகான் வேடத்தில் நடிக்கதான் ஆர்வமாக இருக்கிறார்கள் ராம் கதாபாத்திரத்திற்கு யாரும் நடிக்க முன்வரவில்லை. இப்போது உள்ள ஹீரோக்கள் சிங்கிள் ஹீரோ படங்களில் நடிக்கதான் ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் தான் ராம் லகான் படம் கிடப்பில் இருக்கிறது " என்றார்.
ரோஹித் ஷெட்டி தற்போது கோல்மால் அகைன் படத்தை இயக்கிவருகிறார். கோல்மால் அகைன் படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.