இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ்த் திரையுலகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குப் பிறகு 'செவாலியே' விருது பெறப் போகும் கமல்ஹாசனுக்கு திரையுலகத்தினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களும், நடிகைகளும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துகளைச் சொல்லிய வண்ணம் உள்ளார்கள். நடிகர் சங்கம் சார்பாக செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நடிகர் சங்கத்தினர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
விஷால் அவருடைய தனிப்பட்ட வாழ்த்துச் செய்தியில், “சிறப்புமிக்க செவாலியே விருது பெறும் அன்புள்ள கமல்ஹாசன் சார் அவர்களுக்கு வாழ்த்துகள். நம் அனைவருக்கும் மகிழ்ச்சியான, பெருமையான தருணம் இது,” எனக் கூறியுள்ளார்.
நடிகர் கார்த்தி அவருடைய வாழ்த்துச் செய்தியில், “சிறப்பு மிக்க செவாலியே விருதுக்காக அன்புள்ள கமல்ஹாசன் சாருக்கு வாழ்த்துகள், நாங்கள் அனைவரும் பெருமைப்படுகிறோம்,” எனக் வறியுள்ளார்.
சிவாஜி குடும்பத்து வாரிசான நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, “செவாலியே விருது மூலம் கௌரவிக்கப்பட உள்ள கமல்ஹாசன் சாருக்கு வாழ்த்துகள். சிறந்த இந்திய நடிகருக்கு சிறந்த கௌரவம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.