Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எங்கள் தலைமுறையின் ‛நடிகர் திலகம்' - கமலுக்கு ரஜினி வாழ்த்து

22 ஆக, 2016 - 12:23 IST
எழுத்தின் அளவு:
Rajini-wishes-to-Kamal-for-chevalier-award

நடிகர் கமல்ஹாசனுக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பலரும் கமலை வாழ்த்தி வரும் வேளையில் கமலின் நண்பரும், சூப்பர் ஸ்டாருமான நடிகர் ரஜினிகாந்த்தும் டுவிட்டரில் கமலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து யார் இந்த குழந்தை என்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியவர். அதே ஆச்சர்யங்களுடன் 60 வயதை கடந்து இன்றும் 16-ஆக இன்றைய இளையதலைமுறையினர் உடன் சமமாக பயணிப்பவர் கமல்ஹாசன். சினிமாவின் சகலகலா வித்தகரான கமலுக்கு பல பட்டங்கள், அங்கீகாரங்கள், கவுரவங்கள் கிடைத்துள்ள போதிலும் தற்போது பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது கமலை இன்னும் மேலே உயர்த்தியுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு அந்த விருதை பெறும் இரண்டாவது நடிகர் கமல் ஆவார்.


கமலுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டதிலிருந்து திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும், அரசியல் கட்சியினரும் கமலை வாழ்த்தி வருகின்றனர். அதிலும் சமூக வலைதளமான டுவிட்டரில் லட்சக்கணக்கானபேர் அவரை வாழ்த்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த்தும் தன் நண்பர் கமலுக்கு டுவிட்டர் வாழ்த்து தெரிவத்துள்ளார்.


ரஜினி விடுத்துள்ள டுவிட்டர் வாழ்த்து செய்தியில், ‛‛எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் செவாலியர் அருமை நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்'' என்று கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in