Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பதட்டத்துடன் காத்திருக்கும் ஷாம்லி!

22 ஆக, 2016 - 08:24 IST
எழுத்தின் அளவு:
shamli-is-awaiting-for-the-release-of-veera-shivaji-movie

தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி இந்தி சினிமா வரை குழந்தை நட்சத்திரமா நடித்தவர் பேபி ஷாம்லி. அதையடுத்து அவர் கதாநாயகியானபோது சரியான ஓப்பனிங் கிடைக்கவில்லை. அதனால் மேல்படிப்புக்காக வெளிநாடு சென்று திரும்பிய அவர், மீண்டும் கதாநாயகியாக தனது ரீ-என்ட்ரியை தொடங்கியிருக்கிறார். அந்த வகையில் தனுஷின் கொடி படத்தில்தான் முதலில் கமிட்டானார் ஷாம்லி. ஆனால் பதட்டத்துடன் காத்திருக்கும் ஷாம்லி!


தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி இந்தி சினிமா வரை குழந்தை நட்சத்திரமா நடித்தவர் பேபி ஷாம்லி. அதையடுத்து அவர் கதாநாயகியானபோது சரியான ஓப்பனிங் கிடைக்கவில்லை. அதனால் மேல்படிப்புக்காக வெளிநாடு சென்று திரும்பிய அவர், மீண்டும் கதாநாயகியாக தனது ரீ-என்ட்ரியை தொடங்கியிருக்கிறார். அந்த வகையில் தனுஷின் கொடி படத்தில்தான் முதலில் கமிட்டானார் ஷாம்லி. ஆனால் பின்னர் அந்த படத்தில் முக்கிய நாயகியாக திரிஷா ஒப்பந்தமானதை அடுத்து, அந்த படத்தில் இருந்து வெளியேறினார்.


அதோடு, விக்ரம் பிரபுவின் வீர சிவாஜி படத்தில் சிங்கிள் நாயகியாக கமிட்டாகி நடித்து விட்டார். தற்போது அனைத்துகட்ட பணிகளும் முடிவடைந்து விட்ட அந்த படம் செப்டம்பர் 23-ந்தேதி திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது. அதனால் தமிழைப்பொறுத்தவரை தான் நாயகியாக நடித்துள்ள முதல் படம் என்பதால் இந்த படம்தான் தனது திரையுலக எதிர்காலத்தின் நிர்ணயிக்கப்போகும் படம் என்பதால் இந்த படத்தின் ரிசல்ட்டை பதட்டத்துடன் எதிர்நோக்கியிருக்கிறார் ஷாம்லி. காரணம், ஷாம்லியிடம் கதை சொல்லியிருக்கும் சில இயக்குனர்களும் வீரசிவாஜி படத்தின் ரிசல்ட்டுக்குப்பிறகுதான் அவரை தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று காத்திருக்கிறார்களாம். ஆக, வீரசிவாஜி ஷாம்லி எதிர்பார்க்கிறபடி ஹிட் படமாகி விட்டால் அடுத்து அவரது கைவசம் பல படங்கள் இருக்கும் என்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in