'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
பாரீஸ்: நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா துறையில் கமல்ஹாசனின் சிறப்பான பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் அவருக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் கலாசாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நடிகர் சிவாஜி கணேசனுக்கு அடுத்ததாக செவாலியே விருது பெறும் தமிழ் நடிகர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
களத்துார் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல் திரைத்துறையில் 57 ஆண்டுகளை கடந்து மிகப்பெரும் ஜாம்பவானாக திகழ்ந்து வருகிறார். இவர் 4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உட்பட ஏராளமான சினிமா விருதுகளை பெற்றுள்ளார்.
இவரின் கலை திறனை பாராட்டும் விதமாக மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்ம பூஷன் ஆகிய விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.
கமல் நடிகராக மட்டுமல்லாது இயக்குநர், திரை கதாசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என சினிமாவின் பல்வேறு துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்.
இதுவரை செவாலியே விருது பெற்ற இந்திய திரைபிரபலங்கள் விபரம் வருமாறு...
1987-ம் ஆண்டு - இயக்குநர் சத்யஜித்ரே
1997-ம் ஆண்டு - நடிகர் சிவாஜி கணேசன்
2007-ம் ஆண்டு - நடிகர் அமிதாப் பச்சன்
2014-ம் ஆண்டு - நடிகர் ஷாரூக்கான்
2016-ம் ஆண்டு - நடிகர் கமல்ஹாசன்