ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில் மாதவன், ரித்திகா சிங் நடித்த படம் இறுதிச்சுற்று. சுதா கோங்கரா இயக்கியிருந்தார். அடித்தட்டு சமூகத்திலிருந்து ஒரு பெண் குத்துச்சண்டையில் உயர்ந்த இடத்துக்கு வருகிற கதை அம்சம் கொண்ட படம். ரித்திகா சிங் என்ற நிஜ குத்துச்சண்டை வீராங்கணை நடித்திருந்தார். மாதவன் பயிற்சியாளராக நடித்திருந்தார். தமிழில் பெரிய வெற்றியை பெற்றது படம்.
தற்போது இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது தமிழில் நடித்த ரித்விகா சிங்கே தெலுங்கிலும் நடிக்கிறார். சுதா கோங்கக்ராவே தெலுங்கிலும் இயக்குகிறார். மாதவன் நடித்த கேரக்டரில் வெங்கடேஷ் நடிக்கிறார். சென்னையில் நடக்கும் கதை ஐதராபாத்தில் நடப்பது போன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தமிழில் தற்போது பிசியாகிவிட்ட ரித்திகா கொடுக்கும் தேதியின் அடிப்படையில் தெலுங்கு படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.