'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
செந்தில்நாதன் இயக்கும் புதிய படம் பேஸ்புக். இதில் ரகுமானுடன் ஆர்.சுரேஷ், அதிதி ஆச்சார்யா, ஸ்ருதி என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர தேவிகா, டெல்லி கணேஷ், மீரா கிருஷ்ணன், சுவாமிநாதன், சாம்ஸ், பாலாஜி ஆகியோரும் நடிக்கிறார்கள். பிரேம்குமார் சிவபெருமான் இசை அமைக்கிறார். ஷர்வானந்த பாண்டியன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.செல்வம் தயாரிக்கிறார்.
"இது பேஸ்புக் தொடர்புகளால் வரும் விபரீதத்தை சொல்கிற படம். ஐ.டி தொழிலின் பின்னணியில் நடக்கிற பிசியாலஜிக்கல் த்ரில்லர் படம். படத்தில் ஹீரோ, ஹீரோயின் என்று யாரும் இல்லை பேஸ்புக்தான் ஹீரோ, பேஸ்புக்தான் வில்லன். ஒரு மனோதத்துவ டாக்டர் சைக்கோவானால் என்ன நடக்கும் என்பது கதையின் இன்னொரு ஏரியா. அந்த டாக்டராக ரகுமான் நடிக்கிறார். புதுமையான திரைக்கதை மூலம் இன்றைக்கு தேவையான முக்கிய கருத்தை சொல்கிறோம்" என்றார் இயக்குன் செந்தில்நாதன். பேஸ்புக் என்ற ஆங்கில தலைப்பு இருந்தால் வரிவிலக்கு கிடைக்காது என்பதால் ஒரு முகத்திரை என்று தலைப்பை மாற்றி இருக்கிறார்கள்.