பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
சந்தானம் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் போன்ற முதல் இரண்டு படங்களும் பெரிய வசூலை கொடுக்காத நிலையில், அதற்கடுத்து அவர் நடித்த தில்லுக்குத்துட்டு படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலை குவித்தது. அதனால், அடுத்தபடியாக சர்வர் சுந்தரம் படத்தில் நடித்து வரும் அவர், அந்த படத்தை முடித்ததும் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கிறார். அதற்கடுத்தபடியாக புலியுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். அந்த படத்திற்காக கிராபிக்ஸ் புலியை உருவாக்கும் பணிகள் தற்போது தொடங்கியிருக்கிறதாம்.
மேலும், ஏற்கனவே ஹீரோவானதும் தனது உடல் எடையை குறைத்து விட்ட சந்தானம், இந்த புலி படத்திற்காக சிக்ஸ்பேக்கிற்கு மாறுவதால் இப்போதே டயட்ஸை கடைபிடிக்கத் தொடங்கி விட்டாராம். செல்வராகவனின் படத்தில் நடித்துக்கொண்டே இந்த புலி படத்திலும் நடிக்க முடிவெடுத்துள்ள சந்தானம், இந்த படங்களில் நடிக்கத் தொடங்கியதும் இன்னொரு படத்திலும் நடிக்கப்போகிறாராம். ஆக, விஜயசேதுபதி பாணியில் சந்தானம் ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.