டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை நடிகர் அரவிந்த்சாமி நடத்தி வருகிறார். இதில் பொதுமக்கள் மட்டுமின்றி சில பிரபலங்களும் அவ்வப்போது கலந்து கொண்டு வருகிறார்கள். இதற்கு முன்பு இதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சூர்யா, பிரகாஷ்ராஜைப்போலவே அரவிந்த்சாமியை கலகலப்பாக நடத்தி வருகிறார்.
அதனால் நாளுக்குள் நாள் நேயர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. அதனால் அடுத்தபடியாக புகழ்பெற்ற சில சினிமா பிரபலங்களையும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க வைக்கிறார்களாம். அதன்அடிப்படையில், நடிகை மீனா அடுத்தபடியா தெறியில் நடித்த தனது மகள் நைனிகாவுடன் கலந்து கொள்கிறாராம். இதில், மீனாவுக்கு மெச்சூரிட்டியான கேள்விகள் கேட்கப்படும் அதே வேளையில், குழந்தை நைனிகாவுக்கேற்ற கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளதாம். அந்த எபிசோடு விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.