'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
தூம் படங்களின் வரிசையில் விரைவில் தூம்-4 உருவாக இருக்கிறது. இப்படத்திற்கு ‛தூம் ரீலோடடு' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். தூம்-4ல் நடிகர் சல்மான்கான் நடிக்கப்போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. ஆனால் சல்மான் நடிக்க மறுத்துவிட்டதாகவும், அதனால் அவருக்கு பதில் நடிகர் ஷாரூக்கான் நடிக்க இருப்பதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
தூம்-4 படம் தொடர்பாக ஷாரூக்கானிடம் பேசி வருகிறார்கள். சம்பளம், கால்ஷீட் இவைகள் எல்லாம் ஒத்து வரும் பட்சத்தில் அவர் நடிப்பார் என தெரிகிறது. அதேசமயம் தூம் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்த அபிஷேக் பச்சன் தூம்-4ல் நடிக்க மாட்டார் என தெரிகிறது. அவருக்கு பதில் ரன்வீர் சிங் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இப்படத்தை அடுத்தாண்டு துவக்க திட்டமிட்டுள்ளனர்.