தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
யார் என்ற திகில் படத்தை இயக்கிய கண்ணன், தில்லுக்கு துட்டு படத்தை இயக்கிய ராம்பாலா, டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆண்டன் ஆகியோர் இணைந்து நேற்று பயம் ஒரு பயணம் என்ற படத்தின் முக்கிய காட்சிகள் அடங்கிய சிறப்பு தொகுப்பை பார்த்தனர். பின்னர் அவர்கள் அது பற்றி கூறியதாவது:
யார் கண்ணன் : தமிழ் சினிமா வரலாற்றில் அடுத்த ஒரு யார் திரைப்படமாக அமைய இருக்கும் படம் பயம் ஒரு பயணம் தான் என்பதை நான் உறுதியாக சொல்லி கொள்கிறேன்
ராம்பாலா : பயம் ஒரு பயணம் படத்தின் சிறப்பு காட்சி தொகுப்பை நான் காண்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த இருபது நிமிட காட்சி தொகுப்பே இப்படி ஒரு பயம் கலந்த திகில் அனுபவத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது என்றால், முழு படமும் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள். நிச்சயமாக பயம் ஒரு பயணம் படத்தை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் திரையரங்கில் பயத்தால் அலற போகிறார்கள்.
சாம் ஆண்டன் : பின்னணி இசை, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு ஆகிய மூன்றும் தான் ஒரு திகில் படத்திற்கு தேவையான மூன்று முக்கிய அம்சங்கள். அந்த மூன்று அம்சங்களும் பயம் ஒரு பயணம் படத்தில் கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறது. இதற்காக உழைத்த ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
வருகிற 25ந் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தை மணிஷர்மா இயக்கி உள்ளார், டாக்டர் பரத் ரெட்டி, விஷாகா சிங், மீனாட்சி தீக்ஷித், ஊர்வசி, சிங்கம்புலி, யோகி பாபு, ஜாங்கிரி மதுமிதா உள்பட பலர் நடித்துள்ளனர். ஒய்.ஆர்.பிரசாத் இசை அமைத்துள்ளார், ஐ.ஆண்ட்ரீவ் ஒளிப்பதிவு செய்துள்ளா. ஆக்டோ ஸ்பைடர் புரொடக்ஷன் சார்பில் துரை மற்றும் சண்முகம் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தை யாரும் தனியாக பார்க்க முடியாது என்று சவால் விட்டுள்ளார் இயக்குனர் மணிஷர்மா.