வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்து வரும் தமன்னா தற்போது மலையாளப் பட உலகிலும் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாளத்தில் திலீப் நாயகனாக நடிக்க உள்ள படத்தில் தமன்னாவை நாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறதாம். இந்தப் படத்தில் சித்தார்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தமன்னா நடித்து நேற்று வெளியான தர்மதுரை படத்தில் அவருடைய நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. வழக்கமான நாயகியாக இல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தமன்னா நடித்துள்ளார். தமன்னாவிற்கு அடுத்து பிரபுதேவா ஜோடியாக நடித்துள்ள தேவி, விஷால் ஜோடியாக நடித்துள்ள கத்திச் சண்டை, மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.
மற்ற ஹிந்தி நடிகைகளைக் காட்டிலும் குறுகிய காலத்தில் தமிழ் பேசக் கற்றுக் கொண்டவர் தமன்னா. தெலுங்கையும் நன்றாகவே பேசுவார். மற்ற ஹிந்தி நடிகைகளுடன் ஒப்பிடும் போது தென்னிந்தியத் திரையுலகில் தமன்னாவிற்கு ரசிகர்கள் அதிகம். அதற்கு அந்தந்த மொழிகளை அவர் பேசக் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் ஒரு காரணம். விரைவில் மலையாளத்தையும் கற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கலாம்.