ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஸ்டுடியோ 9 புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள படம் தர்மதுரை. சீனுராமசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் விஜயசேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டிடான்கே, ராதிகா, கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். நேற்றைய தினம் திரைக்கு வந்துள்ள இந்த படம் நேற்று மதியம் 3 மணி அளவில் பத்திரிகையாளர் காட்சி சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் திரையிடப்பட்டது.
3 மணிக்கு திரையிடப்பட்ட தர்மதுரை படம் 5.30 மணிக்கு நிறைவுற்றது. அப்போது அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் பத்திரிகையாளர்கள முன்பு வந்து நின்றார். படத்தை பார்த்து விட்டீர்கள். இனிமேல் உங்களது விமர்சனங்களை நல்லபடியாக பதிவு செய்யுங்கள் என்று கூறியவர், அப்படியே சாஸ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்கினார். அதையடுத்து மேற்கொண்டு எதுவும் பேசாமல் எழுந்து சென்று விட்டார்.