மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் என இரண்டு படங்களில் அடுத்தடுத்து நாயகியாக நடித்தவர் ஆஷ்னா சவேரி. அதையடுத்து சந்தானம் நடித்த படங்களிலும் இவர் இடம் பிடிப்பதற்கான சூழ்நிலைகள் இருந்தது. ஆனால், அந்த நேரம் பார்த்து சந்தானம்- ஆஷ்னா பற்றிய கிசுகிசுக்கள் பலமாக பரவியதால், தனது புதிய படத்திற்கு வேறு நடிகையை புக் பண்ணினார் சந்தானம். அதையடுத்து கிசுகிசுக்கள் அடங்கிப்போயின.
இருப்பினும், கோலிவுட்டில் இருந்து வெளியேறாமல் புதிய படங்களுக்காக கல்லெறிந்து வந்த ஆஷ்னா சவேரி, தற்போது மீன்குழம்பும் மண்பானையும் படத்தில் காளிதாஸ் ஜெயராமுக்கு நாயகியாக நடித்து வருகிறார். இதையடுத்து, முன்னணி நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்று ஆஷ்னா எடுத்த முயற்சிகள் பெரிதாக ஒர்க்அவுட்டாகவில்லை. அதனால் மீண்டும் தனக்கு கைகொடுக்குமாறு சந்தானத்திடம் சிபாரிசு கோரியுள்ளாராம். இந்நிலையில், செல்வராகவன் படத்திற்கு பிறகு பல படங்களில் நடிக்க கதை கேட்டுள்ள சந்தானம், ஒரு புதுமுக இயக்குனர் நடிக்கும் படத்தில் ஆஷ்னா சவேரிக்கு சிபாரிசு செய்துள்ளாராம். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.