ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்திய நாட்டில் இதுவரை கிரிக்கெட் விளையாட்டை பார்க்க வைத்த பெருமைதான் தொலைக்காட்சிகளுக்கு இருந்தது. வேறு எந்த ஒரு விளையாட்டையும் நாடே பார்த்திருக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் நேற்று நடைபெற்ற பாட்மிண்டன் போட்டியின் இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து விளையாடியதை இந்தியத் திருநாடே பார்த்தது. கிரிக்கெட்டைத் தவிர்த்து பாட்மிண்டனைப் பார்க்க வைத்த பெருமை பி.வி.சிந்துவையே சாரும்.
நேற்று சூப்பர் ஸ்டார்களுக்கெல்லாம் சூப்பர் ஸ்டார் ஆக மாறிவிட்டார் சிந்து. அவர் வென்றது வெள்ளிப் பதக்கம்தான் என்றாலும் அனைவரது மனதையும் வென்றுவிட்டார். ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ஆமீர்கான், சல்மான் கான், ஷாரூக்கான் ஆகிய சூப்பர் ஸ்டார்கள் முதல் அனைத்து இந்திய நடிகர்கள், நடிகைகள் நேற்று வாழ்த்து அவர்களது வாழ்த்து மழையில் நனைய வைத்துவிட்டார்கள். ஒவ்வொருவரின் வாழ்த்தையும் பதிவிட்டால் அது போய்க் கொண்டேயிருக்கும். அனைவருக்கும் தனித்தனியாக சிந்து நன்றி சொல்ல வேண்டுமென்றால் அடுத்த ஒலிம்பிக்கே வந்துவிடும்.
உச்சகட்டமாக ரஜினிகாந்த், தன்னை சிந்துவின் ரசிகர் என்று சொல்லி சிந்துவை பாராட்டித் தள்ளிவிட்டார். “வாழ்த்துகள் சிந்து...உங்களுடைய தீவிர ரசிகனாக மாறிவிட்டேன். வாழ்த்துகள்..” என டிவிட்டரில் ரஜினிகாந்த் பாராட்டியதை 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்தும், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ரிடிவீட் செய்தும் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர். வேறு எந்த ஒரு நடிகரின் டிவீட்டும் இந்த அளவிற்கு மக்களிடம் போய்ச் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவோ, விளையாட்டோ எதிலும் ரஜினியின் 'ரீச்' என்பதே வேறு...!