இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட் நடிகையான கத்ரீனா கைப், சல்மான் உடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். பின்னர் நடிகர் ரன்பீர் கபூரை தீவிரமாக காதலித்தார். சமீபத்தில் அந்த காதலும் முறிந்தது. இந்நிலையில் நடிகை கத்ரீனா கைப், தற்போது நடிகர் ஆதித்யா ராய் கபூரை காதலிப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
கத்ரீனாவும், ஆதித்யா ராய் கபூரும் ‛பிட்டூர்' என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது ஆதித்யாவுடனான நெருக்கம் காரணமாக ரன்பீர்-கத்ரீனா இடையேயான காதல் முறிந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது ரன்பீர் உடனான காதல் முரிந்த பின்னர், கத்ரீனா, ஆதித்யாவுடன் இன்னும் நெருக்கமாய் உள்ளதாகவும், இருவரும் ஒன்றாக சுற்றுவதாகவும் பாலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.