ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு |
த்ரிஷா - நயன்தாராவுக்கு இடையிலான தொழில் போட்டி, நீண்ட காலமாக நடந்து வரும் நிலையில், சமீபகாலமாக, முன்னணி கதாநாயகர்களோடு மட்டுமல்லாமல், சோலோ கதாநாயகியாகவும் நயன்தாரா நடிப்பதை பார்த்த த்ரிஷா, நாயகி படத்தில், சோலோ கதாநாயகியானார். அதைத் தொடர்ந்து, தற்போது, மோகினி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்த, சாமி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதால், மீண்டும், இப்படத்தில் நடிக்க, கடுமையான முயற்சி எடுத்தார் த்ரிஷா. ஆனால், தற்போது, விக்ரமுடன், இருமுகன் படத்தில் நடித்துவரும் நயன்தாரா, சாமி - 2 பட வாய்ப்பை, கைப்பற்றி விட்டார். இதனால், நயன்தாரா மீது, செம கடுப்பில் இருக்கிறார், த்ரிஷா.
— சினிமா பொன்னையா