இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
1990ம் ஆண்டு அஞ்சலி படத்திற்கு இசை அமைத்த இளையராஜா தற்போது அஞ்சலி பாப்பா என்ற படத்திற்கு இசை அமைக்கிறார். பெங்களூரைச் சேர்ந்த அஜய் நோயல் என்ற இளைஞர், இளையராஜாவின் பெரிய ரசிகர். சமீபத்தில் இளையராஜாவை சந்தித்த அவர் தன்னிடம் இருந்த ஒரு குழந்தை பற்றிய கதையை கூறியிருக்கிறார். இளையராஜாவுக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. இந்த கதையை நீங்கள் படமாக எடுத்தால் நான் இசை அமைத்து தருகிறேன் என்று கூறியுள்ளார். இளையராஜா கால்ஷீட் கிடைத்த சந்தோஷத்தில் திளைத்த அஜய் படத் தயாரிப்பு வேலையில் இறங்கி விட்டார்.
மூன்று வயது குழந்தையின் கதையான அஞ்சலி பாப்பாவாக விபுலா நாயக் என்ற குழந்தை நடிக்கிறது. இயக்குனர் அஜய் நோயலே கதையின் நாயகனாக நடிக்கிறார், சன்னதி ஹீரோயின். இவர்கள் தவிர ஆகாஷ், விஷாகா, வந்தனா, நிவேதா ஆகியோரும் நடிக்கிறார்கள். ஷில்பா நாயக் தயாரிக்கிறார். எம்.ராஜதுரை ஒளிப்பதிவு செய்கிறார். பிரசாத் லேப் ஸ்டூடியோவில் இளையராஜா இன்று படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.