'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபலங்களைப்பற்றி அவ்வப்போது ஏதேனும் எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டு அவர்களின் அதிருப்திக்கு ஆளாகி வருபவர் இயக்குனர் ராம்கோபால்வர்மா. அந்த வகையில், வில்லாதி வில்லன் வீரப்பன் படத்தை வெளியிடு வதற்கு முன்பு, வீரப்பன் பற்றிய கதையை நான் சேகரிக்க சென்றபோது, நடிகர் ராஜ்குமாரை அடுத்து ரஜினிகாந்தையும் வீரப்பன் கடத்த திட்டமிட்டிருந்ததாக எனக்கு தகவல் கிடைத்தது என்று ஒரு பரபரப்பான செய்தியை வெளியிட்டு அந்த படத்திற்கு பப்ளிசிட்டி தேடிக்கொண்டார்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் அவர் ரஜினியை வம்புக்கு இழுப்பது போன்று ஒரு செய்தியை டுவிட் செய்திருக்கிறார். அதில், முடிஞ்சா இவனை புடி படத்தில் சிறப்பாக நடித்துள்ள சுதீப்பினால் ரோபோ போன்று நடித்து விட முடியும். ஆனால் ரோபோவில் நடித்த ரஜினியால் நீங்கள் நடித்த நான்ஈ போன்ற ஒரு படத்தில் நடிக்க முடியாது என்று செய்தி வெளியிட்டுள்ளார்.
இதனால் ஏற்கனவே ராம்கோபால்வர்மா மீது செம கடுப்பில் இருந்து வரும் ரஜினி ரசிகர்கள் இப்போது இன்னும் கடுப்பாகி அவரை திட்டித்தீர்த்து வருகின்றனர். இந்தநேரத்தில், கன்னட நடிகர் சுதீப் வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், என் நடிப்பை பாராட்டியதற்கு நன்றி. அதேசமயம், ரஜினியுடன் என்னை ஒப்பிட்டது சரியல்ல. அந்த அளவுக்கு தகுதி இல்லாதவன் நான் என்று உடனடியாக ராம்கோபால் வர்மாவுக்கு பதில் கொடுத்துள்ளார்.