தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
‛திருநாள்' படத்தை தொடர்ந்து நடிகர் ஜீவா, ‛சங்கிலி புங்கிலி கதவ தொற', ‛கவலை வேண்டாம்' என்ற படங்களில் நடிக்கிறார். இதுதவிர இன்னும் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் தற்போது புதிதாக ‛கீ' என்ற படத்தில் நடிக்கிறார் ஜீவா. இப்படத்தை செல்வராகவனிடம் உதவியாளராக இருந்த காலீஸ் என்பவர் இயக்குகிறார். ஹீரோயின்களாக நிக்கி கல்ராணியும், ‛காவியத்தலைவன்' அனைகாவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஆர்ஜே பாலஜி, மலையாள நடிகர் பத்மசூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். குளோபல் இன்போடெய்ன்மென்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமானது. ஒரேக்கட்டமாக இப்படத்தின் ஷூட்டிங்கை முடிக்க உள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜீவா, ‛ஈ' என்ற படத்தில் ஒற்றை எழுத்துள்ள தலைப்பில் நடித்தார். இப்போது அதேப்பாணியில் வித்தியாசமாக ‛கீ' என்ற ஒற்றை தலைப்புள்ள படத்தில் நடிக்கிறார்.