'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
ஆடியோ ரிலீஸ் எப்போது? படம் எப்போது ரிலீஸ்? என்ற விவாதங்கள் போய் இப்போது ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் எப்போது வெளிவரும் என்றெல்லாம் ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அல்லது ரசிகர்களை இப்படி எதிர்பார்க்க வைத்துவிட்டனர்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வரும் 'எந்திரன்' படத்தின் 2ஆம் பாகமான '2.0' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பற்றித்தான் இப்போது மக்களிடையே எதிர்பார்ப்பு. வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகவிருக்கிறது என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. சிலர் இல்லை என்றும் கூறி வந்தனர்.
இந்நிலையில் செப்டம்பரில் '2.0-வின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகாது என்ற அதிகாரபூர்வ தகவல் தற்போது வெளியாகி உள்ளது! இது குறித்த அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது லைகா நிறுவனம். அந்நிறுவனத்தை சேர்ந்த ராஜு மகாலிங்கம் '2.0' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருகிற நவம்பர் மாதம் தான் வெளியாகும் என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதனால் 2.0 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி சம்பந்தமான குழப்பங்கள் ஓரளவுக்கு தீர்ந்துள்ளது.