Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் தள்ளிப் போகும் 'சண்டக்கோழி 2'

18 ஆக, 2016 - 10:03 IST
எழுத்தின் அளவு:
Sandakozhi-2-may-postponed-again

'அஞ்சான்' படம் கொடுத்த மாபெரும் அடியிலிருந்து இயக்குனர் லிங்குசாமி இன்னும் எழாமலே இருக்கிறார். இயக்குனராக ஒரு பக்கம் 'அஞ்சான்' அடியைத் தாங்கிக் கொண்டு இன்னொரு பக்கம் தயாரிப்பாளராக 'உத்தம வில்லன்' படத்தின் உள்குத்தையும் தாங்கிக் கொண்டிருக்கிறார். இந்த இரண்டு படங்களும் தந்த நஷ்டத்தால் அவரது தயாரிப்பில் இருந்த படங்கள் அப்படியே நின்றுவிட்டன. விஜய் சேதுபதி நடித்து முடிந்து போன 'இடம் பொருள் ஏவல்' படத்தை இரண்டு வருடங்களாக வெளியிடாமல் வைத்திருக்கிறார்கள். நல்ல வேளை 'ரஜினி முருகன்' படம் மட்டும் எப்படியோ தப்பித்துவிட்டது. அவர்கள் தயாரிப்பில் இருந்த மற்ற படங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டன.


தயாரிப்பாளராகத் துவண்டாலும் இயக்குனராக எழுந்து நிற்கலாம் என தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் வாய்ப்பு லிங்குசாமிக்கு வந்தது. ஆனால், என்ன நடந்ததோ அதிலிருந்தும் கழட்டிவிடப்பட்டார் லிங்குசாமி. இவரின் இந்தத் தெலுங்கு பக்கத் தாவலால் 'சண்டக் கோழி 2' படத்தை ஆரம்பிக்கலாம் என இருந்த விஷாலும், லிங்குவிற்கு எதிராக பேசிவிட்டு படத்தையே 'டிராப்' செய்துவிட்டார். வேறு வழியில்லாமல் மீண்டும் விஷாலிடம் தஞ்சமடைந்தார் லிங்குசாமி. பெரிய மனதுடன் 'சண்டக் கோழி 2' படத்தை மீண்டும் ஆரம்பிக்க சம்மதித்தார் விஷால். இருந்தாலும் படம் தற்போது மீண்டும் ஆரம்பமாகுமா என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.


விஷால் தற்போது நடித்து வரும் 'கத்திச் சண்டை' படத்திற்குப் பிறகு மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை முடித்ததும் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க அவர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் என்கிறார்கள். அப்படியென்றால் 'சண்டக் கோழி 2' என்ன ஆயிற்று என்றுதானே கேட்கிறீர்கள்...வழக்கம் போலவே படத்தை மீண்டும் தள்ளி வைக்கும் முனைப்புடன் இருக்கிறாராம் விஷால்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in