ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
வாகைசூடவா இனியா, தற்போது பொட்டு, வைகை எக்ஸ்பிரஸ் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். தாய்மொழியான மலையாளத்திலும் பல படங்களில் நடித்து வரும் அவர், தற்போது தெலுங்கு சினிமாவில் மார்க்கெட்டை பிடிக்க ஐதராபாத்திலும் அவ்வப்போது முகாமிட்டு பட வேட்டை நடத்தி வருகிறார். இந்த நிலையில், மலையாள சீரியல்களில் அதிகமாக நடித்துள்ள தனது அக்காள் ஸ்வாதியையும் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்ய சில டைரக்டர்களிடம் சிபாரிசு செய்து வருகிறார் இனியா.
ஆனால், சுப்ரமணியபுரம் ஸ்வாதி பல படங்களில் நடித்து வருவதால், தனது அக்காளுக்கும் அதே பெயரை வைத்தால் குழப்பம் ஏற்படும் என்று இப்போது தனது அக்காள் ஸ்வாதிக்கு தாரா என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறார் இனியா. ஏற்கனவே தமிழ் சினிமாவில் நயன்தாரா, உதயதாரா, சானியதாரா என சில நடிகைகள் இருக்கும் நிலையில், தற்போது இனியாவின் அக்காள் தாரா என்ற புதிய நாமகரணத்துடன் கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்க தயாராகிக்கொண்டி ருக்கிறார்.