ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சிம்புவின் ஒரு படம் எப்போது துவங்கும், எப்போது முடியும், பின்னர் அது எப்போது வெளிவரும் என்று யாருக்குமே தெரியாது. அந்தளவுக்கு கடந்த சில ஆண்டுகளாக அவருடைய பட ரிலீஸ்களில் ஏகப்பட்ட குழப்பம், பஞ்சாயத்து நீடித்து வருகிறது. தற்போது சிம்பு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‛‛அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'' படத்தில் நடித்து வருகிறார். சிம்பு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார். இதில், சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒன்று மதுர மைக்கேல் ரோல். சமீபத்தில் இதன் போஸ்டர் வெளியிடப்பட்டது. தற்போது சிம்பு, ஸ்ரேயா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படப்படிப்பு நடந்து வருகிறது
இந்நிலையில் சிம்பு இந்தப்படத்தில் மூன்று கெட்-அப்புகளில் நடிக்க உள்ளதால் படத்திற்கு மூன்று டீசர்களை வெளியிட உள்ளார்கள். சிம்பு, ஒவ்வொரு கெட்-அப்பில் உள்ள படப்பிடிப்புகள் முடிந்ததும் அதன் போஸ்டரையும், டீசரை வெளியிட படக்கு முடிவு செய்துள்ளார்கள். ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிந்ததும் ஒரு டிரைலரை வெளியிடவுள்ளார்.
இந்தப்படமாவது பிரச்னையின்றி முடிந்து, ரிலீஸாகுமா.? பொறுத்திருந்து பார்ப்போம்...!